என்னதான் நடக்கிறது?...மின்துறை அமைச்சர் கூட்டத்திலேயே மின்வெட்டு!...டென்ஷன் ஆன அமைச்சர்! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மாநிலம், கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், கர்நாடக மாநில மின் துறை அமைச்சர் ஜார்ஜ் பங்கேற்று மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் மின் வெட்டு உள்ளிட்ட மின்சார பிரச்னை தொடர்பாக  ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென மின் வெட்டு ஏற்பட்டது.  

இதையடுத்து ஊழியர்கள்சரி செய்த பின்னர் மின் இணைப்பு கிடைத்தது.தொடர்ந்து, மின் துறை அமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில், அங்கிருந்த ஜெனரேட்டரும் செயல்படாததால் ஆத்திரமடைந்த அமைச்சர், என்னதான் நடக்கிறது இங்கு. வேண்டுமென்றே செய்கிறீர்களா? என்று அதிகாரிகளை கண்டித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்  மின் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்திலேயே அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்தி வெளிவரும். மின் தட்டுப்பாட்டால், இந்த பிரச்னை ஏற்படவில்லை. வேறு பிரச்னையால், மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்து அறிக்கை கேட்டுள்ளதாக கூறினார். பின்னர் அமைச்சர் கிளம்பியதும், கோலார் மாவட்ட ஆட்சியர் அக்ரம் பாஷா மின் துறை ஊழியர்களை கடுமையாக கண்டித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is going on Power cut in the meeting of the Minister of Electricity The Minister is tension


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->