இரவு 2 மணி... எண்ணெயை கொதிக்க வைத்த மனைவி... அடுத்த நொடியே கணவருக்கு நேர்ந்த கொடூரம்...! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் கணவரின் அந்தரங்க பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். இவரது மனைவி பாவனா. இதில் வங்காளதேசம் டாக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சுனில் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர், என் கணவருடன் உங்கள் மனைவி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து சுனில் குமார் இது குறித்து மனைவியுடன் விசாரித்துள்ளார். ஆனால் பாவனா நான் பேசவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று பாவனா, இளைஞர் ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை சுனில் குமார் கண்டித்துள்ளார். இருப்பினும் பாவனா கண்டு கொள்ளவில்லை. இதனால் சுனில் குமார் பாவனாவின் மொபைல் போனை எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாவனா, இரவு 2 மணிக்கு சுனில் குமார் தூங்கியவுடன் எண்ணெயை கொதிக்க வைத்து சுனில் குமாரின் அந்தரங்க பகுதியில் ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சுனில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பாவனாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife pours boiling oil on her husband private area in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->