சூட்கேஸ் பெட்டிக்குள் அழகிய நிலையில் பெண் சடலம்.! டெல்லியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சூட்கேஸ் பெட்டிக்குள் அழகிய நிலையில் கிடந்த பெண் உடல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி பஞ்சாபி பாக் பகுதியில் ஒரு சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது வாய்க்காலில் இருந்து சூட்கேஸ் பெட்டியை எடுத்து திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. உடல் மிகவும் அழகிய நிலையில் இருந்ததால் பெண்ணின் அடையாளம் கண்டறிய முடியவில்லை.

ஆனால் சூட்கேஸ் பெட்டிக்குள் இருந்த பெண்ணின் வயது சுமார் 28 முதல் 30 வயது வரை இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman body rotting inside a suitcase box in Delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->