மதுகுடிப்பதற்காக குழந்தையை விற்ற இளம்பெண் - கர்நாடகாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் அருகே உலிகி கிராமத்தில் இளம் பெண் ஒருவர் பிச்சை எடுத்து சாலையோரம் மற்றும் மண்டபங்களிலும் தங்கி பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இளம் பெண்ணின் குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். 

இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தையை மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், சாலையில் சுற்றிய பெண்ணுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. 

ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையை அந்த பெண் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால், அதேப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.100-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதையடுத்து குழந்தையின் தாயை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sale baby for no money to buy drinks in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->