மகனுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தாய் - மஹாராஷ்டிராவில் சோகம்.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் ஏழு வயது மகனுடன் ஒரு பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அகோலா மாவட்டம் கேட்பூர்ணா ஆற்றில் ஏழு வயது சிறுவனுடன் பெண் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரது உடல்களும் ஆற்றில் மிதந்து வந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

அந்தத் தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடமைகளை சோதனை செய்ததில் அவர் வார்தா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அங்கிருந்து அகோலா பகுதிக்கு ரயில் மூலம் வந்து, பின்னர் குரான்கெட் பகுதிக்கு பேருந்தில் பயணித்ததற்கான பயண சீட்டுகள் இருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide with son in maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->