நகை, பணத்திற்காக முதியவருக்கு மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்த தம்பி மகன் கைது.! - Seithipunal
Seithipunal


நகை, பணத்திற்காக முதியவருக்கு மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்த தம்பி மகன் கைது.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்வல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் நேற்று வீட்டில் உயிரிழந்து நிலையில் கிடந்துள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், அவரது மகன்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வயது மூப்பு காரணமாக தந்தை இறந்திருக்கலாம் என்று  இறுதிச் சடங்குகளை செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது கோவிந்தனின் மகன் கிருஷ்ணன், இறுதிச்சடங்கிற்காக தந்தையின் வீட்டிலிருந்து பணத்தை எடுக்கச் சென்றபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதைப்பார்த்த கிருஷ்ணன் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கோவிந்தனின் தம்பி மகன் பாட்ஷா என்கின்ற பாஸ்கரனைச் சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பாட்ஷா தனது பெரியப்பாவிடம் உள்ள மூன்று லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு மதுபானத்தில் கொக்கு மருந்து விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் இருந்து பணத்தையும் நகையையும் பறிமுதல் செய்து பாட்ஷாவை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrested for kill old man for gold and money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->