வேப்பங்குச்சி விற்று 40 ஆயிரம் சம்பாதித்த வாலிபர் - நெகிழவைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் கூடிய கூட்டத்தினரிடையே பல்துலக்குவதற்கு வேப்பங்குச்சி விற்கும் வாலிபரின் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், கூட்டத்தின் நடுவே கையில் ஏராளமான குச்சிகளை ஏந்தியபடி வாலிபர் ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். 

அவரிடம் ஒருவர் பேச்சு கொடுத்ததில் " பல்துலக்கும் வேப்பங்குச்சிகளை கும்பமேளா கூட்டத்தில் விற்பனை செய்கிறேன். 5 நாளில் ரூ.40 ஆயிரம் சம்பாதித்துள்ளேன். எனக்கு இந்த யோசனையை எனது காதலி சொன்னாள். 

முதலீடே தேவையில்லாத தொழில். அவளால் நான் இவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன்" என்று புன்னகை பூக்க கூறினார். கும்பமேளாவில் வாலிபர் ஒருவர் பல்துலக்கும் குச்சி விற்று நாற்பதாயிரம் சம்பாதித்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth earned forty thousand in maha kumbamela for sales neem stick


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->