பணத்தை சாலையில் பறக்கவிட்ட யூடியூபர் ஹர்ஷா கைது! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பரபரப்பாக  காணப்படும்  குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர். 

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லி பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்பட்டும். இந்நிலையில் இந்த பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு யூடியூபர் ஒருவர் ரீல்ஸ் எடுத்தார். ஹர்ஷா மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விட்டார்.

இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும், தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுதனர். மேலும் நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை எடுக்க முண்டியடித்தனர். இதனால்  அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.  ரூபாய் நோட்டுகளை சாலையில் பறக்கவிட்டு ரீல்ஸ் எடுப்பது மிகவும் மோசமான செயல்  என்றும், எனவே  இதற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTuber Harsha arrested for flying money on the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->