மணமணக்கும் பீன்ஸ் பொரியல்.! - Seithipunal
Seithipunal


காய்கறி வகைகளில் ஒன்றான பீன்ஸில் கலோரிகள், கொழுப்புச்சத்து, நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் கே, சி, பி9, இரும்புச்சத்து, பொட்டாசியச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. இந்த பீன்ஸை வைத்து பொரியல் செய்வது குறித்து இங்குக் கண்போம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் 
கடுகு 
சீரகம் 
உளுந்து
கடலை பருப்பு 
கறிவேப்பிலை 
பெரிய வெங்காயம் 
பீன்ஸ் 
மஞ்சள் தூள் 
உப்பு 
வரமிளகாய் 
வறுத்த வேர்க்கடலை 
தேங்காய் துருவல் 

செய்முறை:-

ஒரு கடாயில் வரமிளகாய், வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் மூன்றையும் வறுத்து அதை மிக்ஸிஜாரில் சேர்த்து கொரகொரப்பான பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுந்து, சீரகம் மற்றும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக பொரியவிட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதில் பீன்ஸ், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக வதங்கவிட வேண்டும்.

இறுதியாக அரைத்து வைத்துள்ள வறுத்த கடலைப்பொடியை சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு இறக்கினால் சுவையான பீன்ஸ் பொரியல் தயார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beens poriyal recepie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->