இது தான் சனாதன தர்மம்!...ஆளுநரின் வரையறை இதோ! - Seithipunal
Seithipunal


அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் 201 வைத்து பிறந்தநாள் இன்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை என்றும், பெரியவர், சிறியவர் இல்லை என்று கூறினார். சிலர் இதில் வேறுபாடு காட்டி குளிர்காய நினைப்பதாக பேசிய ஆளுநர், அதற்கு அவசியம் இல்லை என்றும், சிலர் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர் என்றும், அனைவரும் ஒன்று என்பது தான் தெரிவித்தார்.

அண்மையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள் என்று, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.

இந்நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சனத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொறுத்திருந்து பாருங்கள் என்று சிரித்த முகத்துடன் [LETS WAIT AND SEE] பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is sanatana dharma here is the definition of a ruler


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->