சனாதன கொடியை வேரறுக்க வேண்டும்!...பவன் கல்யாணுக்கு அர்ச்சகர் சங்கம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சனாதன தர்மம் குறித்து பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு அர்ச்சகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி  அமைத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில்  ஆட்சி செய்து வரும் நிலையில், அண்மையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள் என்று, பேசி இருந்தார்.

மேலும், உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள் என்று கூறிய பவன் கல்யாண், சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்றும் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அர்ச்சகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் அர்ச்சகர் சங்கம் தெரிவித்துள்ளதாவது, அரசு நியமன சமத்துவ பாதையில் பயணிக்கும் ஆந்திர துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பை நியாயப்படுத்தும் சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ள அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் அர்ச்சகர் சங்கம், சமூகத்தை போல் இறைவன் ஆலயங்களிலும் சமத்துவம் தழைத்தோங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Sanatana flag must be uprooted archakar sangh condemns pawan kalyan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->