சென்னை ECR சாலையில் செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை! காரணம் என்ன?!  - Seithipunal
Seithipunal



சென்னை சைக்ளோத்தான் 2024 போட்டி காரணமாக நாளை (அக்.06) ECR சாலையில் எவ்வித வாகனங்களும் செல்லக்கூடாது; அதற்கு மாறாக பூஞ்சேரி OMR சாலை - அக்கரை சாலையை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் தமிழக விளையாட்டு ஆணையம், HCL Cyclothon Chennai-2024 என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சைக்ளோத்தான்-2024 போட்டியை நாளை (06.10.2024) காலை 05.00 மணி முதல் 10.00 மணிவரை கானத்தூர் ரெட்டிகுப்பம் கிராமம் மாயாஜால் திரையரங்கம் முதல் மாமல்லபுரம் கிராமம் தனலட்சுமி ஸ்ரீனிவாச கல்லூரி வரை வந்து "U" வளைவில் திரும்ப மாயாஜால் செல்ல உள்ளது.

இதன் காரணமாக  கிழக்குகடற்கரைச்சாலையில் அச்சமயம் எவ்வித வாகனங்களும் செல்லக்கூடாது எனவும், அதற்கு மாறாக பூஞ்சேரி OMR சாலை-அக்கரை இணைப்பு சாலையினை வாகனங்கள் செல்ல பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

போட்டியின்போது கால்நடைகளை சாலையில் நுழைய விடக்கூடாது. உள்ளூர் வாகனங்களும் சாலையில் தடை விதிக்கப்படுகிறது. 

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் பந்தய நேரத்தில் விருந்தினர்கள் வந்து செல்ல அனுமதிக்க இயலாது. போட்டி முடிந்த பிறகு அதாவது காலை 10.00 மணிக்கு மேல் வழக்கம்போல் செல்லஅனுமதி அளிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclothon Chennai ECR OMR 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->