சுவையான 'கேரட் லட்டு' ஒரு முறை இப்படி செய்து பாருங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான கேரட் லட்டு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
கேரட் 
நெய் 
பால் 
பிஸ்தா 
சர்க்கரை

செய்முறை: 
முதலில் கேரட்டை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடேறியதும் துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

கேரட் நன்றாக சுருங்கி பச்சை வாசனை போனதும் அதில் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து கலக்கவும். கேரட் பாலில் நன்றாக வெந்து கெட்டியாகும் வரை மிதமான தீயில் நன்கு வதக்கவும். 

பின்னர் இடைவெளி விட்டு விட்டு நெய் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். 

கேரட் நன்றாக வெந்து கெட்டியானதும் பிஸ்தா துருவி சேர்த்து இறக்கி விடவும். பின்னர் கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கேரட் லட்டு தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Carrot Ladoo Recipe in Tamil 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->