முதல் 20 ஓவர் போட்டி: இந்தியா-வங்காளதேசம் நாளை மோதல்! சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுமா? - Seithipunal
Seithipunal


வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியரில் நாளை நடைபெறுகிறது. இதற்கு முன்பு நடந்த 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவின் தலைமையில் 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. 20 ஓவர் தொடரிலும் வெற்றியைத் தொடரும் நம்பிக்கையில் இருக்கும் இந்திய அணிக்குள் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக சுப்மன் கில், ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மயங் யாதவ் போன்ற புதிய வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

வங்காளதேச அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததால், 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நஜூமுல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேச அணிக்கு வெற்றி பெறும் அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.

இதுவரை இரு அணிகள் 14 முறை 20 ஓவர் போட்டியில் மோதியுள்ள நிலையில், இந்தியா 13 முறை வெற்றியும், வங்காளதேசம் 1 முறை வெற்றியும் பெற்றுள்ளது. நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். போட்டி ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்திய அணி : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ்.

வங்காளதேச அணி:  நஜூமுல் உசேன் ஷான்டோ (கேப்டன்), ஜாகர் அலி, லிட்டன் தாஸ், பர்வேஷ் உசேன், தன்ஜித் ஹசன், தவ்கீத் ஹிர்தோய், மெகிதி ஹசன், மகமதுல்லா, மிராஸ், முஷ்டாபிசுர் ரகுமான், ரகிபுல் ஹசன், நிஷந்த் உசேன், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம், தக்ஷின் அகமது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First 20 Over Match India vs Bangladesh Clash Tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->