அரியானா சட்டசபை தேர்தல்- பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு! - Seithipunal
Seithipunal


அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் முக்கியமான அரசியல் கட்சிகள் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்தனி போட்டியிடுகின்றன.

லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிட்டுள்ளன. பா.ஜ.க. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்புடன் உள்ளது.

முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் புாகத், ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மக்கள் வாக்களிப்பதற்காக 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariana Assembly Election Voting completed in a hectic manner


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->