புத்தாண்டை வரவேற்க வீட்டிலேயே சுவையான சாக்லெட் கேக் செய்யுங்கள்.. செய்முறை இதோ..! - Seithipunal
Seithipunal


கேக் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். புத்தாண்டுக்கு கடைகளில் கேக் வாங்காமல் வீட்டிலேயே சுவையான கேக் செய்து கொடுக்கலாம்.

தேவையானவை:

மைதா மாவு - 250 கிராம்

சர்க்கரை - 5 தேக்கரண்டி
கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி
பழுத்த வாழைப்பழம் - 2
காய்ச்சிய பால் - 4 தேக்கரண்டி
சாக்லேட் துண்டுகள் - தேவைக்கேற்ப
வினிகர் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் சர்க்கரை வாழைப்பழம் சேர்த்து மிக்சியில் நன்றாக அடித்து கொள்ளவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவை நான்கையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் வாழைபழ கலவையை அதனுடன் சேர்க்கவும்.

நன்றாக கலந்து அதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டுகளைச்  நன்றாக கலக்கவும். பாத்திரத்தின் உட்பகுதியில் வெண்ணெயை தடவி இந்த கலவையை அதில் கொட்டவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது தண்ணீரை ஊற்றி குக்கிங் ஸ்டாண்டு பொருத்தவும். 

அதன் மீது கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து காற்றுபுகாதவாறு மூட வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதனை இறக்கி ஆறியதும் பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chocolate Cake Recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->