தேவையற்ற கொழுப்பை நீக்கி, உடல் எடையை குறைக்கும் கொள்ளு அடை.!
how to prepare kollu adai in tamil
உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளை பயன்படுத்தி சுவையான அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - ஒரு கப்
பச்சரிசி - அரை கப்
கொள்ளு - ஒன்றரை கப்
கல் உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
![kollu adai, seithipunal](https://img.seithipunal.com/media/doihasoixbhaiosgi-8dekm.JPG)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுப்பருப்பு சேர்த்து, தண்ணீரில் நன்கு கழுவிக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மீண்டும் ஒருமுறை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.
ஊறவைத்தவற்றை கிரைண்டரில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க நன்கு அரைத்துக்கொள்ளவும் (சுமார் 30 நிமிடங்கள்). அரைத்த மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி தோசையைச் சுற்றி 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு நன்கு முறுகலானதும் திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கவும்.
சுவையான கொள்ளு அடை தயார்.
English Summary
how to prepare kollu adai in tamil