கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை பயக்கும்., புதினா ஜூஸ்.! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

புதினா இலைகள் - 1 கைப்பிடி,
பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

புதினாவை கழுவிச் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகப்பொடி, வெல்லத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

புதினா ஜூஸ், seithipunal

பயன்கள்: 

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வாய்யில் ஏற்படும் நாற்றம் அகலும், பசியை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் காலங்களில் ஏற்படும் முக்கிய பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்கி அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு அடிக்கடி தோன்றும் வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு.

கடுமையான வயிற்றிப் போக்கின் போது இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும்.

தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகள் போன்றவற்றிற்கு புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் அவர்களின் தீராத வேதனை குறையும்.

புதினா சாரை முகத்தில் தடவி வர முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் நல்ல பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to prepare pudhina juice in tamil


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->