சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு.! செய்வது எப்படி.!
how to prepare verkadalai laddu
தேவையான பொருட்கள் :
ஏலக்காய் தூள் - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
வெல்லம்/கரும்பு சர்க்கரை - 3/4 கப்
செய்முறை :
வறுத்த வேர்க்கடலையை முதலில் ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலையின் மேல் உள்ள தோலை நீக்கி எடுத்து கொள்ளவும்.
பின்னர் தோல் நீக்கிய கடலையை மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டும் திரண்டு வரும் வரை மிக்ஸியை மெதுவான வேகத்தில் அரைக்கவும்.
பின்னர் ஒரு தட்டில் அதை கொட்டி சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு தயார்!
வேர்க்கடலை, எண்ணெய் விடும். எனவே, உருண்டைகளாய் உருட்ட வேறு எதையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
English Summary
how to prepare verkadalai laddu