வித்தியாசமான சுவையில் 'மாங்காய் சிக்கன்' இப்படி செய்து பாருங்க.!  - Seithipunal
Seithipunal


வித்தியாசமான சுவையில் மாங்காய் சிக்கன் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
சிக்கன் 
கருவேப்பிலை 
கொத்தமல்லி
பச்சை மிளகாய்
உப்பு 
எண்ணெய் 
பெரிய வெங்காயம் 
இஞ்சி பூண்டு விழுது 
மாங்காய் 
மிளகாய் தூள் 
மஞ்சள் தூள்
கரம் மசாலா தூள் 
சீரகத்தூள்
மல்லி தூள் 

செய்முறை: 
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மாங்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மல்லி தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும். 

பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். 

மாங்காய் நன்றாக குழைந்து வெந்து வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் அவ்வளவுதான் சுவையான மாங்காய் சிக்கன் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mango Chicken Recipe in tamil


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->