மழைக்காலம் வந்துவிட்டது, சளி இருமல் பிரச்சனையா ? அப்போ மஞ்சள் டீ உங்களுக்கு உதவும்..!
Manjal Tea Recipe
மழைக்காலத்தில் சளி, இருமல் போன்ற நோய்களும் ஏற்படும், அவற்றை தவிர்க்க மஞ்சள் டீ அருந்தலாம். அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
தேவையானவை :
மஞ்சள், இஞ்சி, கருமிளகு, தேன்
செய்முறை :
ஒருபாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளுங்கள். கொதித்ததும் அதில், மஞ்சள், இஞ்சி கருமிளகு ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள் . தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வையுங்கள். அதன்பின், அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
இப்படி குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுக்காக்க உதவும். மழைகாலத்தில் அஜூரணம் வராமல் தடுக்க உதவும். குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.