ஊட்டச்சத்து நிறைந்த ராகி அவல் புட்டு! செய்வது எப்படி.?
nutritious ragi aval pudding
ஆரோக்கியம் நிறைந்த ராகி அவல் புட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
ராகி அவல் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 5
துருவிய தேங்காய் -1/4 கப்
ஏலக்காய் - 4
செய்முறை:
முதலில் ராகி அவலை சுடு தண்ணீரில் கொட்டி 5 நிமிடம் கழித்து நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ராகி அவலை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடியாக்கி கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ராகி அவலைக் கொட்டி அதனுடன் பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய், துருவிய தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதாங்க சத்துக்கள் நிறைந்த ராகி அவல் புட்டு ரெடி.
English Summary
nutritious ragi aval pudding