வீட்டில் பால் இருக்கா.. அப்போ இந்த ரெசிபியை உடனே செய்து சாப்பிடுங்க.! - Seithipunal
Seithipunal


வீட்டில் பால் இருக்கா.. அப்போ இந்த ரெசிபியை உடனே செய்து சாப்பிடுங்க.!

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். என்னதான் விளையாடச் சென்றாலும், டிவி பார்த்தாலும் அவர்களுக்கு பொழுது போகாது. அப்போது அவர்களுக்கு ஏதாவது தின்பண்டம் சாப்பிட தோன்றும். 

ஆனால், பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களின் சுமையை குறைப்பதற்காக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ரசகுல்லா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :-

பால் - 2 லிட்டர், ஏலக்காய் - 4, எலுமிச்சை - 1 சிறியது, கிராம்பு - 2, சீனி - 2 கப், தண்ணீர் - 2 கப், குங்குமப்பூ -சிறிதளவு, ரோஜா இதழ், பாதாம், முந்திரி, பிஸ்தா.

செய்முறை :-

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பல் கொதிக்கும் போதே அதில் எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். சிறிது நேரத்தில் பால் திரிந்து தனித் தனியாக இருக்கும். அவ்வாறு திரிந்த பாலை வடி கட்டி எடுத்து கொள்ள வேண்டும். 

அந்த திரிந்த பாலை நன்றாக கழுவி விட்டு ஒரு துணியில் கட்டி ஒரு மணி நேரம் வரை தொங்க விட வேண்டும். தண்ணீர் முழுவதும் வடிந்த பிறகு அந்த பன்னீரை  ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைய வேண்டும். பிசைந்த பன்னீரை குட்டி குட்டி உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சீனியை எடுத்து அதே அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு கொதித்த பின் அதில்,  ஏலைக்காயை தட்டி போட வேண்டும்.

அதனுடன் உருட்டி வைத்திருந்த பன்னீர் உருண்டைகளை பாகுடன் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சிறிது குங்குமப்பூவை தூவி விட்டு சுமார் 8மணி நேரம் மூடி வைத்த பிறகு ரசகுல்லா சர்க்கரை பாவுடன் கலந்து நன்கு ஊறி பெரிதளவில் இருக்கும். அதில், ரோஜா இதழ்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்தாள் இதோ சுவையான ரசகுல்லா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of rasakulla


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->