இனிப்பான 'தேன் மிட்டாய்' எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்.!  - Seithipunal
Seithipunal


சுவையான தேன் மிட்டாய் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 
உளுத்தம் பருப்பு
அரிசி 
சர்க்கரை 
பேக்கிங் சோடா 
புட் கலர்
எண்ணெய் 

செய்முறை: 
முதலில் தேவையான அளவு உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை சுத்தம் செய்து 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் கூறிய அரிசி மற்றும் உளுந்து மரபை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

அரைத்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் பேக்கிங் சோடா, ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் சர்க்கரை ஒரு கம்பி பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து அதில் பொரித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடுங்கள் அவ்வளவுதான் சுவையான தேன் மிட்டாய் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thaen mittai recipe in tamil


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->