மந்திரியை விட பெரிய பலம் முந்திரிக்கு தானாம்.!
cashew nut benefit
முந்திரி பருப்பு எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இது சுவைப்பதற்கு பட்டர் டேஸ்ட்டில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வறுத்த முந்திரியில் கொஞ்சம் கருப்பு உப்பு தூவி சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
இந்தியாவை பொருத்த வரை இது தான் மக்களின் விருப்பமான ஸ்நாக்ஸ்ம் கூட. இந்த முந்திரி பருப்பில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். அது பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த முந்திரி பருப்பை நீங்கள் மற்ற வகைகளில் கூட எடுத்துக் கொள்ளலாம். முந்திரி பருப்பு பால், க்ரீம், முந்திரி சீஸ் வகைகள், க்ரீம் சாஸ் போன்ற வடிவில் கூட பயன்படுகிறது. இந்த முந்திரி பருப்பு மருத்துவ துறையிலும், வருமானம் ரீதியாகவும் நிறைய வகைகளில் பயன்படுகிறது.
எடை குறைப்பு :
தற்போது நடத்திய ஆய்வுப்படி நட்ஸ் சாப்பிடாத பெண்கள் அதிக உடல் பருமன் கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறைந்து சிக்கென்று இருப்பீர்கள்.
இதய ஆரோக்கியம் :
இந்த முந்திரி பருப்பில் மோனோசேச்சுரேட்டேடு கொழுப்பு, பாலிஅன்சேச்சுரேட்டேடு கொழுப்பு போன்றவை உள்ளன. இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை, ட்ரைகிளிசரைடு போன்றவற்றை எரித்து நல்ல கொலஸ்ட்ராலை சமன் செய்கிறது. இதனால் இதய நோய்கள், பக்க வாதம், கரோனரி இதய நோய்கள் போன்றவை வராமல் காக்கிறது.