"இந்த தப்ப மட்டும் பால் காய்ச்சுறப்போ செய்யவே கூடாது".! - Seithipunal
Seithipunal


நம் வீடுகளில் காலை வேளையில் நேரமாவதை மிச்சப்படுத்த பாலினை வேகமாக கொதிக்க வைப்போம். இவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல் என மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாலை ஏன் மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்?  என்பதற்கான காரணங்களை கூறுகின்றனர்.

பாலை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கும் போது அதில் இருக்கக்கூடிய சர்க்கரை எரிந்து மோர் மற்றும் புரதங்கள்  திரண்டு கடாயின் அடிப்பகுதியில் படிந்து விடும். இதனால் அந்த சத்துக்களில் இழப்பு ஏற்படுகிறது.

பாலினை கொதிக்க வைக்கும் போது நீராவியாதல் தொடங்குகிறது  இதன் காரணமாக அவற்றிலிருக்கும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆகியவை  பிரியத் தொடங்குகின்றன. இவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் சிதைந்து போகாமல் இருக்க பாலினை மிதமான சூட்டில் வைத்து கிளறி விட வேண்டும்.

பாலில் இருக்கக்கூடிய சர்க்கரையான லாக்டோஸ் வெப்ப உணர் திறன் கொண்டது. கிருமி மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க பாலை கொதிக்க வைக்கும் போது இந்த லேக் டோஸ்மற்றும் பிறசேர்மங்கள் அளிக்க முடியாத சர்க்கரையாக மாறுகின்றன.

பாலில் இருக்கக்கூடிய கொழுப்பு அமிலங்கள் நீண்ட நடுத்தர மற்றும்  குறுகிய சங்கிலி கொழுப்பு அமைப்புகள் ஆகும் இவை தனித்துவமானவை. பாலினை அதிக அளவில் கொதிக்க வைக்கும் போது  நீண்ட சங்கிலி கொழுப்புகள் நடுத்தர மற்றும் குறுகிய சங்கிலி கொழுப்புகளாக உருமாற்றம் அடைகிறது.

அதிகமாகவும் வேகமாகவும் கொதிக்க வைப்பதினால் அவற்றில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் சிதைவடைகின்றன. மேலும் அதன் நிறம் மற்றும் சுவையிலும் மாற்றம் ஏற்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont boil the mllk in a faster way and this is the reason


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->