கமகமக்கும்.. சூப்பரான பூண்டு தக்காளி கிரேவி.. ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடும் செம்ம ரெசிபி.!
Garlic tomato gravy
தேவையான பொருட்கள்:
பூண்டு - 20 பற்கள்,
நாட்டு தக்காளி - 1/4 கிலோ
மிளகாய்தூள் - 5 ஸ்பூன்
இஞ்சி - 30 கிராம்,
வெந்தயம் - 1/2 கரண்டி,
கடுகு - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 150 மிலி,
செய்முறை:
தக்காளிகளை கழுவி விட்டு பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். என் தோல் நீக்கிய இஞ்சி துருவி எடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு வெந்தயம் தாளித்து அதன் பின் பூண்டு பற்களையும் சீவி வைத்த இஞ்சியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக பச்சை வாசனை போக வதங்கியவுடன் அதில் தக்காளியை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும். தக்காளியை வதக்கும்போதே உப்பை சேர்த்தால் தக்காளி சீக்கிரமாக வதங்கும்.
அதன் பின் மிளகாய் தூள் சேர்த்து அடிக்கடி கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கினால் சூப்பரான பூண்டு தக்காளி தொக்கு தயார். இதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.