முடி உதிரவ்வு அதிகமாக உள்ளதா? இந்த உருண்டையை மட்டும் சாப்பிடுங்.!
hair growth tips
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களது முடியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், அவர்களுக்கு ஏற்ற ஒரு அற்புத ஹேர் பகை இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பாதாம்
முந்திரி
பிஸ்தா
வால் நட்
பேரிட்சை பழம்
நெய்
ஏலக்காய்ப் பொடி
உப்பு
செய்முறை:-
ஒரு கடாயில் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பேரிட்சை பழம் உள்ளிட்டவற்றை தனித்தனியாக வறுத்து ஆறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம், பிஸ்தா, முந்திரி, சேர்த்து அரைத்துக்கொண்டு, அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல், பேரிட்சையை மிக்ஸி ஜாரில் தனியாக சேர்த்து அரைத்துவிட்டு, அதில் அரைத்து வைத்துள்ள நட்ஸ் பொடிகளை சேர்க்க வேண்டும்.
இதில் உப்பு மற்றும் ஏலக்காய்ப்பொடி தூவி, நெய்விட்டு நன்றாக பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் சேகரித்து வைத்து தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டு வர 15 நாளில் முடி உதிர்வு முற்றிலும் நின்றுவிடும்.