வானத்தில் மேகங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றுவது ஏன் தெரியுமா.?!
how clouds in different sizes
வானத்தில் மேகங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றுவது ஏன் தெரியுமா.?
வானம் நீலமாக தோன்றும். அதன் கீழ் மேகங்கள் வெவ்வேறு பக்கத்தில் அல்லது வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு வடிவத்திலும், நிறத்திலும் தோன்றுகின்றன.
வளிமண்டலத்திலுள்ள நீராவி, காற்றை விடப் பாரம் (அடர்த்தி) குறைந்த வாயு என்பதால் அது வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லும்.
மேலே சென்று குளிர்ச்சி அடைந்து அதனால் நெருக்கமாகி சிறு நீர்த் துளிகள் (நீர்த்திவலைகள்) ஆகும்.
பின் அவை வளிமண்டலத்திலுள்ள சிறு சிறு தூசு துணிக்கைகளின் மேல் ஒடுங்கி படியும் நீர்த்திவலைகளாகின்றன.
இவ்வாறு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் உண்டான சிறு நீர்த்திவலைகளின் சேர்க்கையே மேகம் என்பதால் அவை பல வடிவங்களில் தோன்றுகின்றன.
English Summary
how clouds in different sizes