வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா? இதோ சில டிப்ஸ்.!
How to control excessive dust in the house
நம் வீட்டை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் ஒரு முறை சுத்தம் செய்த வீடு அடிக்கடி தூசி ஆகிக்கொண்டே இருந்தால் அதனை சுத்தம் செய்வது மிகவும் சிரமமான காரியமாகும். மேலும் நமது வீட்டை அடிக்கடி சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. நமது வீடு அடிக்கடி குப்பையாகாமல் சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று பார்ப்போம்.
வீட்டின் படுக்கை விரிப்புகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். அதிகமாக தூசி படியும் இடமாக இவையே உள்ளன. தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றுவது நல்லதாகும். படுக்கை விரிப்புகளை நன்றாக தட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவற்றை மாற்றுவதன் மூலம் அதிக தூசி படியாமல் தடுக்கலாம்.
தரையிலிருக்கும் மூளை முடுக்குகளிலும் துடைப்பம் கொண்டு தூசு சேராமல் நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இந்த தூசிகளை எடுப்பதற்கு டஸ்ட் ஃபேன் களையும் பயன்படுத்தலாம் தரையிலிருக்கும் அழுக்குகளை அடிக்கடி நீக்குவதன் மூலம் தூசி சேராமல் தடுக்கலாம்.
ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலேயே வீட்டில் அதிகமாக தூசிகள் சேருகிறது. இதனை தவிர்ப்பதற்கு வீட்டில் அதிகப்படியான இறப்பதும் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு டிஹைமிடிஃபையர் போன்ற சாதனங்கள் தற்போது வந்திருக்கின்றன.
நம் வீட்டில் தூசிகள் அதிகமாக வருவதை தடுக்க ரோலர் பிளைண்ட்கள் பயன்படுத்தலாம். இவை தூசி வருவதை தடுக்காது ஆனால் அவற்றை மறைத்து விடும். எனவே நமது வீடுகளில் திரைச்சீலைகளுக்கு பதிலாக ரோலர் பிளைண்ட்கள் பயன்படுத்தி தூசிகள் அதிகமாக சேருவதை கட்டுப்படுத்தலாம்.
English Summary
How to control excessive dust in the house