IND vs SA: 2-வது டெஸ்ட் போட்டி... இந்திய அணி வீரர்களின் பட்டியல்.?
ind vs sa 2nd test indian team
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. தென் ஆப்பிரிக்காவின் கோட்டையாக செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இந்தியாவிற்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை அங்கு நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை டிராவை சந்தித்து உள்ளது. மேலும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. புஜாரா, ரஹானே இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு, ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியனின் உத்தேச பட்டியல் : மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷர்தூல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.
English Summary
ind vs sa 2nd test indian team