கடல் தேவதையின் மக்கள் எனும் பெருமைக்குரியவர்... யார் இவர்.?! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர்...

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்...

கடல் தேவதையின் மக்கள் எனும் பெருமைக்குரியவர்...

தமிழ்ச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்...

திருநெல்வேலி மாவட்ட கடற்கரை ஊரான உவரியை சேர்ந்தவர்... 

நாவலாசிரியர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்...

தமிழ் நெய்தல்குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர்...

யார் இவர்... இவர் தான்... 

ஜோ டி குருஸ் (joe dcruz):

பிறப்பு :

ஜோ டி குருஸ் திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் 1963ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி பிறந்தார்.

இவர் திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். மேலும்     இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.

குடும்பம் : 

ஜோ டி குருஸ் சசிகலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

எழுத்துப்பணி : 

இவருடைய முதல் நாவல், 'ஆழி சூழ் உலகு-(2004)" கடற்கரை வாழ் சமூகத்தினரின் வாழ்க்கையைப் பதிவு செய்தது. இரண்டாவது நாவலான, 'கொற்கை" 2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவருடைய மூன்றாவது நாவல் அஸ்தினாபுரம்-2016ஆம் ஆண்டு வெளிவந்தது. 

ஜோ டி குருஸ் ஆவணப்படங்கள் விடியாத பொழுதுகள்-2008, TOWARDS DOWN-2009, எனது சனமே-2010, இனையம் துறைமுகம்-2018 போன்றவை ஆகும்.

மேலும், புலம்பல்கள் (கவிதை)-2004, வேர்பிடித்த விளைநிலங்கள் (தன்வரலாறு)-2017, கவனம் ஈர்க்கும் கடலோரம் (கட்டுரைகள்)-2019 போன்ற பல படைப்புகளை இவர் படைத்துள்ளார். 

கடல்சார் மக்களின் வாழ்வியல், தேவைகள், உரிமைகள் மற்றும் கடமைகள் போன்றவற்றை தன் படைப்புகளில் இவர் உணர்த்துகிறார். 

இவர் திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

விருதுகள் :

இவரது கொற்கை என்ற புதினத்திற்கு 2013ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் எழுதிய 'ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 

இவை தவிர, கனடா இலக்கியத் தோட்ட விருது-2006, சுஜாதா-உயிர்மை விருது-2011 (கொற்கை), லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது-2013, இலயோலா இலக்கிய விருது-2014, இலக்கிய வீதி அன்னம் விருது-2014, உஸ்தாத் பிஸ்மில்லாகான் விருது-2015, திருவள்ளுவர் இலக்கிய விருது-2015 ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

joe dcruz history in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->