இந்திய சானிட்டரி நாப்கின்களால் ஆபத்து.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


நம் இந்திய நாட்டில் விற்கப்படுகின்ற பெரும்பான்மையான சானிட்டரி நாப்கின்களானது மிகவும் ஆபத்து நிறைந்த ரசாயனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஒரு காலக்கட்டத்தில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் கந்தல் துணிகளை பயன்படுத்தி அதை யாருக்கும் தெரியாமல் துவைத்து துணிக்கடியில் காயவைத்து சுகாதாரமற்ற முறையில் மீண்டும் அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அதையெல்லாம் போக்கிய ஒரு விஷயமாக தான் நாப்கின்கள் வந்தன.

அதன் பிறகு மென்சுரஸ் கப், டாம்பான் உள்ளிட்ட பல சாதனங்கள் வந்தாலும் கூட பெரும்பான்மையான பெண்கள் சானிட்டரி நாப்கின்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், சந்தையில் கிடைக்கும் 10 வகை சானிட்டரி பேட்களை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

அதன்படி, இந்தியாவில் அதிகப்படியான சானிட்டரி நாப்கின்களில் பயன்படுத்தப்படுகின்ற ரசாயனங்கள், அதை பயன்படுத்துகின்ற பெண்களிடம், கர்ப்பம் குறித்த சிக்கல்கள், எண்டோமெட்ரியோசிஸ், கரு வளர்ச்சியில் சிக்கல்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Napkin make shock effects for Using women


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->