உங்க வீட்டு 'மிக்ஸி'யில் கண்டதையும் போட்டு அரைக்கும் பழக்கமுள்ளவரா நீங்க.?! அப்போ 'இதை' தெரிஞ்சுக்கோங்க..!! - Seithipunal
Seithipunal


அந்தக் காலத்தில் எல்லாம் எது அரைப்பது என்றாலும் அம்மிக்கல்லைத் தான் உபயோகிப்பார்கள். ஆனால் இப்போது அம்மியின் இடத்தை எல்லோரது வீடுகளிலும் மிக்ஸி பிடித்து விட்டது என்றே கூறலாம். ஆனால் எல்லா பொருட்களையும் மிக்ஸியில் அரைக்க கூடாது, மீறினால் அது விரைவில் பழுதாகி விடும். அவை என்னென்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்வோம். 

1. காய்கறிகள் : 

நார் உள்ள காய்கறிகளையோ, முழுதான காய்கறிகளையோ மிக்ஸியில் அரைத்தால் விரைவில் ப்ளேடு பழுதாகி விடும். 

2. மிகவும் சூடான பொருட்கள் :

சிலர் நேரமின்மை காரணமாக வறுத்த மசாலா பொருட்கள் மற்றும் பிற சூடான பொருட்களை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைப்பார்கள். இது மிகவும் தவறு. அந்த பொருட்களை ஆற வைத்த பின்னரே மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இல்லாவிட்டால் மிக்ஸி ஜார் வெடித்து விடக் கூடும். 

3. ஐஸ் கட்டிகள் :

குளிர்ந்த பொருட்களை மிக்ஸியில் போடவே கூடாது. ஐஸ் கட்டிகளை மிக்ஸியில் போடுவதன் மூலம் விரைவில் மிக்ஸி பழுதாகி விடும். 

4. மசாலா பொருட்கள் :

உடனடியாக பிரெஷான இன்ஸ்டன்ட் ஹோம் மேட் மசாலா தயாரிக்க நினைப்பவர்கள் முழு மசாலாக்களை அப்படியே மிக்ஸியில் போட்டால் விரைவில் மிக்ஸி ப்ளேடு பழுதாகி விடும்.. எனவே மசாலா பொருட்களை இடித்து, நசுக்கி பின்னரே மிக்ஸியில் போட வேண்டும். 

5. பருப்பு மற்றும் கிழங்குகள் :

கிழங்கு மற்றும் பருப்பு வகைகளையும் மிக்ஸியில் அரைக்க கூடாது. இவை கடினமாகவும், மாவுத் தன்மை கொண்டவையாகவும் இருப்பதால் விரைவில் பழுதாகி விடும்.

6. காஃபி கொட்டைகள் :

கடினமான காஃபி கொட்டைகளை மிக்ஸியில் போட்டு அரைத்தால் விரைவில் ப்ளேடு பழுதாகி விடும். எனவே இவற்றையும் தவிர்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Things To Avoid Grind in Mixer


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->