முகத்தை பளபளப்பாக்கும் முட்டையின் வெள்ளைக்கரு..!
tips of glow skin
தற்போதைய காலத்தில் உள்ள பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பகல்வேறு இயற்கை வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் முட்டையின் வெள்ளைக்கருவை வைத்து வீட்டிலேயே தெளிவான மற்றும் பொலிவான சருமத்தை பெற சில குறிப்புகள் குறித்து இங்குக் காணலாம்.
தேவையானவை
முட்டை வெள்ளைக்கரு - 1
செய்முறை
முட்டையிலிருந்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். அதன் பின்பு இதை கண் மற்றும் வாய் பகுதியைத் தவிர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும்.
முட்டை வெள்ளைக்கருவுடன் தயிர் கலந்து பேஸ்பேக் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
முட்டை வெள்ளைக்கரு
தயிர்
செய்முறை
முட்டை வெள்ளைக் கரு மற்றும் தயிர் இரண்டையும் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
இதேபோல், மஞ்சளுடன் முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் மாஸ்க் போடுவது எப்படி?
தேவையானவை
முட்டை வெள்ளைக்கரு
மஞ்சள் தூள்
செய்முறை
முட்டையின் வெள்ளைக்கருவுடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும்.
கற்றாழையுடன் முட்டை வெள்ளைக்கரு சேர்த்து கலந்து மாஸ்க் போடுவது எப்படி?
தேவையானவை
முட்டை வெள்ளைக்கரு
கற்றாழை ஜெல்
செய்முறை
கற்றாழை ஜெல்லுடன் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இந்த முறைகளில் முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.