கழுத்தில் கருமை இருக்கிறதா? உடனே போக்க டிப்ஸ் இதோ.! - Seithipunal
Seithipunal


கழுத்தில் உள்ள கருமையை போக்க பெண்கள் ஏராளமான மருத்துவ முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இயற்கையாக கழுத்தின் கருமையை போக்குவதற்கான சில டிப்ஸ்களைக் காண்போம்.

இயற்கை பிளீச் ஆக செயல்படும் எலுமிச்சையின் சாற்றை தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் தடவி ஊறவைத்து குளித்து வந்தால் கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.

ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலந்து அதனை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அப்ளை செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.

கழுத்து கருமையை போக்குவதில் மஞ்சள்தூள் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. மஞ்சள்தூளில், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை உள்ள பகுதியில் அப்ளை செய்தால் கருமை போகும்.

உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்து அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.

தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் தடவி வர கழுத்துக் கருமை சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of remove neck black


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->