உங்கள் கேஸ் சீக்கிரமா காலியாகிடுதா.? இதை ட்ரை பன்னுங்க.. பலன் நிச்சயம்.! - Seithipunal
Seithipunal


உங்கள் கேஸ் சீக்கிரமா காலியாகிடுதா.? இதை ட்ரை பன்னுங்க.. பலன் நிச்சயம்.! 


கேஸ் அடுப்பு என்பது இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. நம் வீடுகளில் அத்தியாவசியமாக பயன்படும் ஒரு சாதனம். இன்றைய கேஸ்  சிலிண்டரின் விலை மற்றும்  நம் சுற்றுச் சூழல் நலனை கருத்தில் கொண்டு கேஸை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது  அவசியமாகிறது. நாம் சில ட்ரிக்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நமது கேஸ் சிலிண்டர் நீண்ட நாட்கள்  உபயோகிக்கலாம். அவை என்ன என்று பார்ப்போம்.

நாம் சமைக்கும் போது பாத்திரம் களுக்கு பதிலாக பிரஷர் குக்கர்களை பயன்படுத்துவதன் மூலம் நாம் சமையல் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு   சமையல் குறைவான நேரத்தில் செய்யப்படுவதால் கேசும் குறைந்த அளவிலேயே செலவாகும்.

ஒவ்வொரு முறை சமைப்பதற்காக பாத்திரத்தை வைக்கும் போதும் அந்த பாத்திரத்தின் அடிப்பகுதியானது  சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது சமையல் விரைவாக முடிவதற்கும் அதிக கேஸ் வீணாவதையும் தடுக்கும்.

சமையல் செய்யும் பாத்திரத்தை திறந்து வைத்து சமைப்பதை  தவிர்க்கவும். பாத்திரத்தை திறந்து வைத்து சமைக்கும் போது அதிக அளவிலான எரிபொருள் தேவைப்படுகிறது . இதனால் கேஸ் அதிக அளவு செலவாகிறது.

நம் கேஸ் அடுப்பின் பர்னரில் அதிக அளவு அழுக்கு தேங்கி இருக்கும் போது கேஸ் விரையம் ஆகும். எப்போதுமே சமைக்கும் போது தீயானது நீல நிறத்தில் வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மஞ்சள் அல்லது  ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் பர்னரை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை அது காட்டுகிறது. ஒரு மாதத்திற்கு இரண்டு தடவையாவது பர்னரை சுத்தம் செய்ய வேண்டும். பர்னரை சுத்தம் செய்வதற்கு  பேக்கிங் சோடா மற்றும் உப்பு  எலுமிச்சை சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் பாத்திரத்தின் பக்கவாட்டில் நெருப்பு படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் பாத்திரத்தின் பக்கவாட்டில் நெருப்பு படுவதால்  எந்த நன்மையும் இல்லை மாறாக நமது கேஸ் தான் வீண் விரயமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to use cookin gas effectively


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->