நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் 'ஹேர் டை' தயாரிக்க... இதோ இப்படி செஞ்சு பாருங்க.!
Try this chemical-free natural hair dye
தற்காலங்களில் தலைமுடிக்கு டை பயன்படுத்துவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வாடிக்கையான பழக்கம் ஆகிவிட்டது. அன்றிருந்த காலகட்டங்களில் வயதானவர்கள் மட்டுமே தங்களது நரை முடியை மறைக்க தலை சாயத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இளைய தலைமுறையினரும் ஃபேஷன் என்ற பெயரில் வண்ண வண்ண சாயங்களை தலைக்கு பூசி வருகின்றனர். இதனால் தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையாக ஹேர் டை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கலோஞ்சி விதைகள் - 2 டீஸ்பூன்
நெல்லிக்காய் தூள் - 1 டீஸ்பூன்
வேப்பம்பூ தூள் - 1 டீஸ்பூன்
மெஹந்தி தூள் - 1 டீஸ்பூன்
காபி தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை :
ரெண்டு டீஸ்பூன் கலோஞ்சி விதைகளை நன்றாக வறுக்கவும் வருத்த பின்பு அவற்றை காய வைக்க வேண்டும். விதைகள் நன்றாக காய்ந்த பின் அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் நெல்லித்தூள், ஒரு டீஸ்பூன் வெப்பம்பூ தூள், ஒரு டீஸ்பூன் மெஹந்தி தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் காபித்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். நன்றாக கலந்த பின்பு இவற்றை ஆறவிட வேண்டும்.
பின்னர் இதனை எடுத்து நரைமுடி இருக்கும் இடங்களிலும் தலை முடியின் வேர்களிலும் நன்றாக தடவ வேண்டும் இந்த இயற்கையான தலை சாயத்தினால் நரைமுடிகள் மறைந்து முடி கருமையாகும. மேலும் இது தலைமுடியின் வேர்களையும் வலுப்படுத்தக் கூடியது. முடி கொட்டுவதை குறைக்கும் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
English Summary
Try this chemical-free natural hair dye