ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் வீசுகிறதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!  - Seithipunal
Seithipunal


ஃப்ரிட்ஜ் எனப்படும் குளிர்சாதன பெட்டியில் பலவையும் போட்டு வைப்பதால் துர்நாற்றம் வீசும். இதனை தவிர்க்க சில எளிய வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம். 

ஃப்ரிட்ஜில் வீசும் துர்நாற்றம் போக்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இருந்து துண்டாக எலுமிச்சை பழத்தை வெட்டி போடுங்கள். பின்னர் அந்த பாத்திரத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும். 

ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அதனைக் கொண்டு ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யலாம். இதன் மூலம் துர்நாற்றம் நீங்கிவிடும். 

காபி கோட்டையின் உதவியுடன் ஃப்ரிட்ஜில் வீசும் துர்நாற்றத்தை நீக்கலாம். காபி கோட்டைகளை ஃப்ரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து காலையில் திறந்தால் துர்நாற்றம் வீசாது.

வெந்நீரில் உப்பு கலந்து துணியில் நனைத்து ஃப்ரிட்ஜியை சுத்தம் செய்தால் துர்நாற்றம் நீங்க விடும். ஆரஞ்சு பழ தோள்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் துர்நாற்றம் நீங்கிவிடும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What can be done avoid bad smell in fridge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->