20 யூடியூப் சேனல்கள் நீக்கம்., அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


இந்திய இறையாண்மைக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விட்ட யூடியூப் தளத்தில் இயங்கி வந்த 20 சேனல்களை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்திய ராணுவம், அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம், இந்தியாவில் சிறுபான்மையினரின் தற்போதைய நிலை என்று, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த கூடிய செய்திகளையும், பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் இந்த யூடியூப் சேனல்கள் தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த யூடியூப் சேனல்கள் விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றில், சிறுபான்மை இன மக்களை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்பட தூண்டும் விதமாக அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த யூடியூப் சேனல்களால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அளித்த இந்த குற்றச்சாட்டு மற்றும் அதற்கான தரவுகளின் அடிப்படையில், இந்திய இறந்தமைக்கு எதிராக செயல்பட்டது, அரசுக்கு எதிராக கருத்துகளைப் பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்த யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய தளங்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 YouTube channels delete


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->