தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்!...அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திங்கள் கிழமை முதலே கிளம்பி வருகின்றனர்.

ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.  மேலும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கின்றனர்.

இதன் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சுங்கச்சாவடிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.  தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை யொட்டி, அரசுப் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தீபாவளியை யொட்டி  தேவைக்கேற்ப தனியார் ஒப்பந்த பேருந்துகள் அரசு கட்டணத்திலேயே, அரசு வழங்குகின்ற பயணச்சீட்டு கொடுக்கப்பட்டு, அரசு ஒப்பந்த வாகனம் என்ற பெயரோடு இயக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டை விட தற்போது முன்பதிவு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் தனியார் பேருந்துகளில் செயலி மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்ததை அடுத்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் அது பயணிகளுக்கு மீண்டும் வழங்கப்படுவதுடன், தொடர்புடைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Additional fee collection in private buses minister action order


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->