சென்னையை அதிர வைத்த டிஎஸ்பி மகன்! காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார், சஸ்பெண்ட்!
Chennai Government Kilpauk Medical College student suspended
சென்னை: மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்த டிஎஸ்பி மகன் உள்ளிட்ட இரண்டு பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவரை ராகிங் செய்த டிஎஸ்பி மகன் உள்ளிட்ட இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கக்கூடிய மருத்துவ மாணவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் ஆலன் கிரைசா, இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சீனியர் மாணவர்களான ஐந்தாம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் கவின், தியானேஷ் உள்ளிட்ட (டிஎஸ்பி மகன் உள்ளிட்ட) இரண்டு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கல்லூரி நிர்வாகம் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
English Summary
Chennai Government Kilpauk Medical College student suspended