10,000 கோடி! மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி! ஏனென்று தெரிகிறதா? யாரென்று புரிகிறதா? பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே டாஸ்மார்க் கடை ஒன்றில், டாஸ்மார்க் கடை ஊழியர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வருடமாக சிறையிலிருந்து தற்போது ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு தமிழக அமைச்சரவைகள் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே டாஸ்மார்க் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 10 ரூபாய் பாலாஜி என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்க்கட்சிகள் முதல் பொது மக்கள் வரை விமர்சனம் செய்து வந்த நிலையில், மீண்டும் அவர் மீது அதே விமர்சனத்தை பல்வேறு தரப்பினரும் முன் வைக்க தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சுமார் 5000 கடைகள், சராசரியாக 5000 பாட்டில்கள் ஒவ்வொரு கடையிலும் விற்பனை என்று எடுத்து கொண்டால் கூட பத்து ரூபாய், பத்து ரூபாயாக ஒரு பாட்டிலுக்கு வாங்கினால் ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 50,000. 

ஒரு நாளைக்கு மொத்தமாக 25 கோடி. ஒரு மாதத்திற்கு 750 கோடி. ஒரு வருடத்திற்கு ரூபாய். 9000 கோடி. மேலும் 2900 பார்கள். அதில் வருமானம் என்று சுமார் 10,000 கோடி ரூபாய் வெறும் 'பத்து ரூபாய் லஞ்சம், ஆண்டுக்கு 10,000 கோடி'!

‘ஏனென்று தெரிகிறதா? யாரென்று புரிகிறதா?" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TASMAC DMK Senthilbalaji BJP Narayanan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->