அரசு பேருந்து.. இலவச பயணம்! அதிர வைத்த சம்பவம்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!
ArasuBus TamilNadu Transport Department
கடந்த 27 ஆம் தேதி திருப்பூரில் இருந்து புளியம்பட்டிக்கு சென்ற அரசு பேருந்தில், பெண் பயணி டிக்கெட் இல்லாமல் பயணிதற்காக, அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"27.10.2024 அன்று காலை திருப்பூரிலிருந்து புளியம்பட்டிக்கு சென்ற வழித்தடம் எண் 30 என்ற பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணச்சீட்டு பெறாததால் ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது துரதிஷ்டவசமானது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் அபராத தொகை பெற்றதும் அதற்கான உரிய ரசீது வழங்குவதற்குள் பயணி அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையாக வாங்கப்பட்ட ரூ. 200 ரொக்க பணம் உரிய பயணியிடமே திருப்பி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ArasuBus TamilNadu Transport Department