உயர்நீதிமன்ற தீர்ப்பு! அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்ததும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக என்பது உறுதியாகியுள்ளது. 

மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதற்கு எந்தத் தடையும் விதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், நீதியரசர்கள் தீர்ப்பை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதை வரவேற்கும் வகையில், சென்னை, ராயப்பேட்டை, அதிமுகவின் தலைமைக் கழகம்-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கூடியிருந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், இளநீர் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK CASE JUDGEMENT ADMK HEAD OFFICE CELIBRATION


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->