தலையை வெட்டி தொங்கவிட்டுவிடுவேன்... அதிமுகவின் பெரும் புள்ளிக்கு கொலை மிரட்டல்.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக, அதிமுகவின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் வழக்கறிஞர் பாலமுருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தெரிவிக்கையில், "உயர்திரு டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை சந்தித்து ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறோம். அந்த புகார் மனுவில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி அவர்களுக்கு, கடந்த சில தினங்களாக கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் இருக்கிறது.

ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு 6வது மாதம் இதேபோல் நிறைய கொலை மிரட்டல் அழைப்புகளும், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளும் வந்துள்ளது.

அதுகுறித்து விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தோம். அதன் பெயரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டது மட்டுமே நடந்தது மற்றபடி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. வாட்ஸ்அப் செய்திகளில், அவர் தலையை வெட்டி தொங்க விடுவதாக கூறியும் அதிகமான அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது.

இது குறித்து டிஜிபி அவர்களிடம் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்றுக்கொண்ட டிஜிபி அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்துள்ள அழைப்பு எண்களையும் அவர்களிடம் சமர்ப்பித்து உள்ளோம்" என்று வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk cvs mp issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->