அதிமுக, திமுகவினரை அதிரவைத்த முன்னாள் எம்பி-யின் மரணம்! வேதனையில் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் (வயது 73) உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். 

அதிமுகவில் இருந்தபோது, 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர் பி.ஆர்.சுந்தரம்.

பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்த நிலையில், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு திமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பி.ஆர்.சுந்தரம் (வயது 73) உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் செய்திக்குறிப்பில், " மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMK Ex MP PR SUNDARAM death MK Stalin Condolences 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->