சுயேச்சை சின்னத்தில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள்... ஓபிஎஸ், இபிஎஸ் சண்டையால் இரட்டை இலைக்கு சிக்கல்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி வேட்ப்பார்கள் போட்டியிடுவதால் சிக்கல் உண்டாகியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக காலியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலானது வருகின்ற மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர், 436 கிராம ஊராட்சி உறுப்பினர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கக்கூடிய இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள், இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள், எட்டு பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தமாக 510 பதவிகளுக்கான தேர்தல் ஆனது நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த திங்கட்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. 

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக மனுவை இதுவரை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை.

இதன் காரணமாக அதிமுக உறுப்பினர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் தான் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் Form A , Form B ஆகிய படிவங்களில் கையொப்பமிட்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

இதுவரை அந்த படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. நாளை மாலைக்குள் வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது வெளியிடப்படும். இதன் காரணமாக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் இல்லாமல், சுயச்சை சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ், இபிஎஸ் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சிக்கல் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk eps ops issue ec twin leaf


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->