நீட் ரத்து என்ன ஆச்சு? 38 எம்.பி.,க்கள் செய்தது என்ன? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!
ADMK EPS Say about NEET Issue DMK Govt 2023
38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் யாரும் நீட் தேர்வு ரத்து குறித்து குரல் கொடுக்கவில்லை என்று, எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தனியார் விடுதியில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கருப்பணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி, சி.வி.சண்முகம் உடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாவது, "8 வழிச்சாலையை அதிமுக ஆட்சியின் போது எதிர்த்தவர்கள் தற்பொழுது அதை கொண்டு வருகிறார்கள், அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி மௌனம் காக்கிறது.
முதல் கையெழுத்து நீட் ரத்து எனக் கூறினார்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் யாரும் நீட் தேர்வு ரத்து குறித்து குரல் கொடுக்கவில்லை.
மக்களின் பிரச்னைகள் எதையும் திமுக பொருட்படுத்தவில்லை, மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். இதற்கு குரல் கொடுக்காத கட்சிகள் அடிமைக் கட்சிகளாக உள்ளன" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
English Summary
ADMK EPS Say about NEET Issue DMK Govt 2023