முக்கிய விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி பழனிசாமி தரப்பு!
ADMK EPS Side Appeal to Chennai HC For Devar Thanga kavasam issue
கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கிலோ எடை உள்ள தங்க கவசத்தை வழங்கினார்.
ஆண்டுதோறும் தேவர் குருபூஜையின் போது, மதுரைஅண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் இருந்து பெறப்படும் இந்த தங்க கவசம், குறு பூஜை முடிந்தபின் வங்கி பெட்டகத்தில் கொடுத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரினார்.
அதே சமயத்தில், அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் நீடிப்பதாக கூறி, ஓபிஎஸ் தரப்பினர் வங்கியில் கடிதம் வழங்கியுள்ளனர்.
ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு செய்தது போல மாவட்ட நிர்வாகத்திடமே தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவெடுக்கலாம் என்ற தகவலும் வெளியாகியது.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
English Summary
ADMK EPS Side Appeal to Chennai HC For Devar Thanga kavasam issue